Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

அத்தி வரதர் வந்தார்


அத்தி  வரதர்  வந்தார்

Athi Varadar 

athivardar kanch -2 
 
அத்திவரதர் 
புண்ணியம் கொடுக்கும் தர்ம சீலன். 


ஆன்மிக  நகரங்களில் சிறந்தது  காஞ்சிபுரம். 


ஒரு சித்திரை மாத திருவோணம்  நட்சத்திரத்தன்று 
பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கு  காட்சியளித்தார் மஹாவிஷ்ணு. 


 “அந்த கோலத்தை   அத்தி மரத்தில் சிலையாக வடித்தார் பிரம்மா.” 
    அதை தேவலோக யானையான ஐராவதம் சுமத்தந்தபடி பூலோகம் வந்தது. 

கோவிலில் இருக்கும் பகுதியை அடைந்ததும், யானை 
சிறிய மலையாக மாறியது. அதுவே ‘அத்தி கிரி ‘  எனப்பட்டது. 
கிரி என்றால் மலை. 


        அங்கு சிலை பிரிதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின் 
அத்தி வரதர் சிலையை முன்னிறுத்தி யாகம் ஒன்றை பிரம்மா நடத்தினர்.


       குண்டத்திலிருந்து எழுந்த தீயால் சிலை சேதமடைந்தது.


     வருத்தமடைந்த பிரம்மா, ‘பெருமாளே ! உன்னை  எப்படி வணங்குவேன் ? ‘ என மனம் வருந்தினார். 

சேதமடைந்த சிலையை  இங்குள்ள திருக்குளத்தில் மூழ்க வைத்து,  40 ஆண்டுக்கு ஒருமுறை பூஜை நடத்து” என அசரீரி ஒலித்தது. பிரம்மாவும் ஒரு வெள்ளிப் பேழையில் சயனநிலையில் சிலையை வைத்து, குளத்தின் நீராழி மண்டபத்தின் அடியில் மூழ்க வைத்தார். நெருப்பால் ஏற்பட்ட உஷ்ணம் தீர, பெருமாள் நீருக்குள் குளிரிந்த நிலையில் இருப்பதாக ஐதீகம்.


     விழாவின் போது குளத்து நீரை வெளியேற்றி சிலையை வெளியே எடுப்பர். 


  “அத்திவரதரை முதல் முறையாக தரிசிப்பவர்கள் 
சொர்க்கத்தையும்.” 
  
athi varadhar needra kolam
    
  “இரண்டாம் முறையாக தரிசிப்பவர்கள் 
வைகுண்டத்தையும்  அடைவர்.” 

கருவறையில்  : நின்ற கோலத்தில் எழுந்தருழள்.


  தனி சன்னிதியில் பெரும்தேவித்தாயார் அருள்புரிகிறார்.

Perundevi thayar kanchipuram


    ஆதிமூர்த்தியானவர் அத்தி வரதர்  இங்கு, ‘அனந்தசரஸ்’ 
தீர்த்ததில் மரத்தாலான பெட்டியில் வைக்கபட்டுள்ளார் . 
 “நாற்பது ஆண்டுக்கு ஒரு முறை 48 நாட்கள் அத்தி வரதருக்கு 
பூஜை சிறப்பாக  நடக்கும். 


அந்த நாட்கள்.


“அத்திவரதர் முதல் 24 நாட்கள்  : சயன கோலத்தில் எழுந்தருழள்.” 


“அத்திவரதர் அடுத்த 24 நாட்கள்  : நின்ற கோலத்தில் எழுந்தருழள்.”    


“ தலத்தை பற்றி :  ஒருவர் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும்,
முக்தி அளிக்கும்  தலம் இது.” 


சிருங்கிபேரர் என்பவருக்கு ஹேமன், சுக்லன் என மகன்கள்,
இருந்தனர்.    கௌதம முனிவரிடம் வேதம் கற்றனர். 
  ஒரு முறை பூஜைக்கு உரிய தீர்த்தம் குருநாதரிடம் 
கொடுத்தபோது, பாத்திரத்தில் இருந்து பல்லிகள் வெளியேறின. 

      இதைக் கண்டு கோபித்த கௌதமர், கவனக்குறைவாக  
இருந்த    சீடர்களைப் பல்லியாக மாறும்படி சபித்தார். 

அவர்கள் சாப விமோசனம் கேட்டு அழவே, காஞ்சிபுரம் 
வரதராஜரை வழிபடும்படி கூறினார். அதன்படி அவர்கள் 
சுயவடிவம் பெற்றனர். 

இதன் அடிப்படையில் தங்க, வெள்ளியாலான பல்லிகள்
 இங்கு உள்ளன. 

அவற்றை தொட்டு வழிபட்டால்,முன்வினை பாவம் தீரும் .
athivarajar temple palli


 அத்திவரதர்  பற்றி கூறினால் நாட்கள் போதாது.
இந்நாளில் பாரத தேசம் அனைத்து வளங்களைப் பெற்று, சிறப்புறவேண்டுமாய், நல் யாகம் நடத்தி பலன் பெறுவோம்.
******* 
 அத்திவரதர் நின்ற கோலத்தில் எழுந்தருழள்.

Athi Vardar needra

*******
























SRIBALAJI BAKTHI our YouTube channel Click Bell Icon and Subscribe

ஸ்ரீ ராம மந்திரம்

ராம மந்திரம்

ராம மந்திரம் ராம த்ரயோதஸூக்ஷாி மந்திரம் கோவிலுக்குள் க்ருஷ்ணரின் முன் சொல்ல வேண்டியது ஹரே...

Popular Post