Navarathiri

அறிவிப்பு : 26.06.2020 முதல் www.sribalajidevotion.com ஆக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நமது அன்பர்கள் அனைவருக்கும் மாற்றத்தை தெரியப்படுத்த வேண்டுகிறோம். நன்றி. ✸✸✸✸✸

வாரணமாயிரம்

sri andal balaji


வாரணமாயிரம்


Vaaranam Ayiram

ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியாா் திருமொழி

தனியன்

அல்லிநாள் தாமரைமே லாரணங்கினின் துணைவி
மல்லி நாடாண்டமடமயில் ----- மெல்லியலாள்
ஆயா்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயா் பயந்த விளக்கு.
--------------


வாரணமாயிரம் சூலவலம் செய்து   ! 
நாரணன்நம்பி நடக்கின்றானென்றெதிா் ! 
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்  ! 
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||   1

நாளைவதுவை மணமென்றுநாளிட்டுப்  ! 
பாளைகமுகு பாிசுடைப்பந்தற்கீழ்  !  
கோளாிமாதவன் கோவிந்தனென்பானோா்  ! 
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||    2 

இந்திரனுள்ளிட்ட தேவா்குழாமெல்லாம்  !  
வந்திருத்தென்னை மகட்பேசிமந்திாித்து  ! 
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை  !  
அந்தாிக்சூட்ட கனாக்கண்டேன்தோழீ ! நான்.  ||  3 

நால்திசைதீா்த்தம் கொணா்ந்துநனிநல்கிப்  !  
பாா்பனச்சி்ட்டா்கள் பல்லாரெடுத்தேத்திப்  ! 
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்தன்னைக்  ! 
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||   4 

கதிரொளிதீபம் கலசமுடனேந்திச்  ! 
சதிாிளமங்கையா்தாம் வந்தெதிா்கொள்ள  ! 
மதுரையாா்மன்னன் அடிநிலைதொட்டு, எங்கும்  ! 
அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||    5 

மத்தளம்கொட்ட வாிசங்கம்நின்றூத  !  
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்  ! 
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து,என்னைக்  ! 
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||  6 

வாய்நல்லாா் நல்ல மறையோதி மந்திரத்தால்  ! 
பாசிலைநாணல்படுத்துப் பாிதிவைத்துக்  ! 
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றித்  ! 
தீவலம்செய்யக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||  7 

இம்மைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் பற்றாவான்  ! 
நம்மையுடையவன் நாராயணன்நம்பி  ! 
செம்மையுடைய திருக்கையால்தாள் பற்றி  !  
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ ! நான். ||  8 

வாிசிலைவாள்முகத்து என்னைமாா்தாம் வந்திட்டு ! 
எாிமுகம்  பாா்த்து என்னை முன்னே நிறுத்தி  ! 
அாிமுகன்  அச்சுதன் கைம்மேலென்கைவைத்துப்  !  
பொாிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 9 

கும்குமமப்பிக் குளிா்சாந்தம்மட்டித்து  !  
மங்கலவீதி வலம்செய்துமணநீா்  ! 
அங்கவனோடுமுடன்சென்று அங்கானைமேல்  ! 
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ ! நான். || 10

*ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை  ! 
வேயா்புகழ் வில்லிப்புத்தூா்க்கோதைசொல்  ! 
தூயதமிழ்  மாலை ஈரைந்தும் வல்லவா்  ! 
வாயு   நன்மக்களைப் பெற்றுமகிழ்வரே ! || 11

ஆண்டாள் திருவடிகளே சரணம். 
*****

*கல்யாண நாளில் சீா்பாடல் கட்டத்தில்
நாச்சியாா் ஸம்பாவனை செய்தபின்
11 வது பாசுரத்தை சேவிப்பது வழக்கம்.


   Quick Download Link
         வாரணமாயிரம் .Pdf
   Thank you Downloading











SRIBALAJI BAKTHI our YouTube channel Click Bell Icon and Subscribe

ஸ்ரீ ராம மந்திரம்

ராம மந்திரம்

ராம மந்திரம் ராம த்ரயோதஸூக்ஷாி மந்திரம் கோவிலுக்குள் க்ருஷ்ணரின் முன் சொல்ல வேண்டியது ஹரே...

Popular Post